வீ.சு.இராமலிங்கம்
தலைவர்
வீ.சு.இராமலிங்கம்
தலைவர்,
பாரதி சங்கம்,
9, 6ஆவது தெரு,
எல்.ஐ.சி.காலனி,
தஞ்சாவூர் - 613007
தொலைபேசி: 9003640220, 04362 - 279873.
இ-மெயில்: bharathisangamthanjavur@gmail.com

இரா.செம்பியன்
செயலாளர்

அன்பான வேண்டுகோள்

பாரதி அன்பர்களுக்கு, வணக்கம்.

மகாகவி பாரதியாரைப் பயிலவும், மக்கள் அறியவும் www.mahakavibharathiyar.info என்னும் இணையதளம், தஞ்சாவூர் பாரதி சங்கம் சார்பில் தொடங்கியிருக்கிறோம். இதில் பாரதியாரின் படைப்புகளும், பாரதியைப் பற்றிய படைப்புகளும் இடம்பெற ஏற்பாடு செய்து வருகிறது.

பாரதியாரின் படைப்புகள் சுமார் 5897 பக்கங்கள். அவற்றை முழுமையாக கூடிய விரைவில் முடிக்க முயற்சி செய்துவருகிறோம்.

பாரதியாரைப் பற்றிய படைப்புகள் சுமார் ஒரு லட்சம் பக்கங்களைத் தாண்டும் என்று கருதுகிறோம். தொடர்ந்து வாழ்நாள் பணியாக இதை மேற்கொண்டிருக்கிறோம். ஏனென்றால் இன்று வரை பாரதி பற்றிய கட்டுரைகள் வந்தவண்ணம் உள்ளன.

மேலும் நமது பாரதி இணையதளத்தை முற்றிலும் இலவசமாக மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். பாரதியை மக்களுக்குக் கொண்டுசெல்வது ஒன்றே குறிக்கோள்.

இணையதளத்தை வடிவமைக்கும் பணிகளை திரு.செம்பியன் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் தட்டச்சு செய்யும் பணிகளையும் அவரே செய்வதாக இருந்தால் மிகுந்த காலம் பிடிக்கும் என்பதால் அதை சம்பந்தப்பட்ட நபர்களிடம் கொடுத்து தட்டச்சு செய்து பெற்று வடிவமைத்தால் விரைவில் இணையதளம் முழுமை பெறும் என்று நம்புகிறோம். ஆகவே தட்டச்சு செய்வதற்கான செலவுத் தொகையை பாரதி அன்பர்களிடம் பகிர்ந்து பெற்றுக்கொள்ள விரும்புகிறோம்.

உத்தேசமான செலவுத் தொகை விபரம் வருமாறு:
---------------------------------------------

பாரதியாரின் படைப்புகள் 5897 பக்கங்கள்.
அதற்கு ஆகும் செலவு சுமார்: ரூ. 61,500/-

பாரதி பற்றிய படைப்புகள் சுமார் ஒரு லட்சம் பக்கங்கள்
அதற்கு ஆகும் தட்டச்சு செலவு சுமார் ரூ. 10,00,000/-

பாரதி அன்பர்கள் தங்களின் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்றவாறு செலவுத் தொகையைப் பகிர்ந்து கொள்ளும்படி அன்புடனும் மிகுந்த உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் கொடுக்கும் தொகை மேற்கண்ட தேவைக்கு அதிகமாக வருமானால் மேற்கொண்டு சேர்க்கவேண்டிய பாரதி பற்றிய படைப்புகள் சம்பந்தப்பட்ட பக்கங்களை சேர்க்கப் பயன்படுத்திக்கொள்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது இணையதளம் விரைந்து முழுமை பெற உதவுங்கள்.

இந்த இணையதளத்துக்கு அறிஞர் அண்ணா அறக்கட்டளை (Regd. 1135/2011 Thanjavur) செலவு செய்து வருகிறது. ஆகவே காசோலை அல்லது வரைவோலையை அறிஞர் அண்ணா அறக்கட்டளை (ARIGNAR ANNA TRUST) என்ற பெயரில் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

BANK ACCOUNT DETAIL:
-------------------------------
A/C Name: ARIGNAR ANNA TRUST
A/C No: 6163567210
Bank: INDIAN BANK
Branch: ESWARI NAGAR (1326), THANJAVUR
IFSC Code: IDIB000T095

பாரதி புகழ் ஓங்குக!!!


நன்றி.

அன்புடன்,
வீ.சு.இராமலிங்கம்
தலைவர், பாரதி சங்கம்
தஞ்சாவூர்.
போன்: 9003640220

 

 

Website Designed by Bharathi Sangam, Thanjavur