பணிகள்

06.06.1982 வ.வெ.சு.ஐயர் நூற்றாண்டு விழா
இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியும் தமிழிலக்கியவாதியுமான வ.வெ.சு.ஐயர் அவர்களின் நூற்றாண்டு விழா தஞ்சை நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

11.12.1982 மகாகவி பாரதி நூற்றாண்டு விழா
மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழா தஞ்சை வழக்கறிஞர், தஞ்சை அ.இராமமூர்த்தி தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

20.07.1985 மகாகவி பாரதியாரின் தொண்டருக்குப் பாராட்டு விழா
மகாகவி பாரதியாரின் நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் பாரதி தொண்டர் சீனி.விசுவநாதனுக்கு பாராட்டு பிழா தஞ்சையில் நடத்தப்பட்டது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற விழாவில் அறிஞர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி, கீர்வாணம் என பல மொழிகளில் பாராட்டுரை நிகழ்த்தினர்.

14.12.1986 மகாகவி பாரதி பிறந்த தின விழா
பாரதி பிறந்ததின விழா தஞ்சையில் அரசு வழக்குரைஞர் திரு.எல்.இராஜாராமன் தலைமையில் நடைபற்றது. புதுகை பி.கிருஷ்ணமூர்த்தி, 'பாரதியும் வ.ரா.வும்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

11.12.1987 மகாகவி பாரதி பிறந்த தின விழா
பாரதி பிறந்த தினவிழா தஞ்சையில் சேக்கிழார் அடிப்பொடி டி.என்.இராமச்சந்திரன் தலைமையில் முனைவர் சி.கனகசபாபதி, "பாரதியும் பாரதிதாசனும்" என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

11.12.1988 மகாகவி பாரதி பிறந்த தின விழா
மகாகவி பாரதி பிறந்த தினவிழா பாரதி சங்கத் தலைவர் திரு.வீ.சு.இராமலிங்கம் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. பேராசியரியர் முனைவர் கு.வெ.பாரசுப்பிரமணியம். "மகாகவி" என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

17.03.1991 பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா
பாவேந்தர் பாரதிதாசன் நூற்றண்டு விழா தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கருதரங்கம், கவியரங்கம் இவைகளோடு சிறப்பரங்கமும் நடத்தப்பட்டது. பாவந்தரின் திருமகனார் திரு.மன்னர் மன்னன் சிறப்புரை நிகழ்த்தினார்.

09.04.1993 திருலோக சீதாராமின் 76ஆம் ஆண்டு பிறந்த தினவிழா
மறைந்த கவிஞர் திருலோக சீதாராமின் 76ஆம் ஆண்டு பிறந்த தினவிழா தஞ்சையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சேக்கிழாரடிப்பொடி டி.என்.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கின் நிறைவில் எழுத்தாளர் த.ஜெயகாந்தன், "பாரதியும் திருலோகமும்" என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

10,11,12.05.1996 மகாகவி பாரதியின் வாழ்வும்-வாக்கும் தொடர் சொற்பொழிவு
மகாகவி பாரதியின் கருத்துக்களை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் நோக்கோடு திருவையாறு நகரில் மூன்று நாள் தொடர் சொற்பொழிவினை தஞ்சை பாரதி சங்கத் தலைவர் திரு.வீ.சு.இராமலிங்கம் நிகழ்த்தினார்.

08.03.1998 மகாகவி பாரதி பிறந்ததின விழா மற்றும் காந்தியடிகள் கருத்தரங்கம்
பாரதி பிறந்த தின விழா மற்றும் காந்தியடிகள் கருத்தங்கம் தியாகி.தி.வெங்கடாசலம் தலைமையில் தஞ்சையில் நடத்தப்பட்டது. "பாரதியின் பார்வையில் காந்தி" என்னும் தலைப்பில் பாரதி அறிஞர் பெ.சு.மணியும், "காந்தியும் தீண்டாமையும்" என்னும் தலைப்பில் திரு.வீ.சு.இராமலிங்கமும் உரை நிகழ்த்தினர்.

08.03.1998 தமிழ் மூதறிஞர் வாழ்வும்-வாக்கும் நூல் வெளியீட்டு விழா
பாரதி சங்கம் நடத்தி வரும் தமிழ் மூதறிஞர் வாழ்வும்-வாக்கும் தொடர் சொற்பொழிவின் முதல் ஆண்டு சொற்பொழிவுகள் நூலாக்கப்பட்டு மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதன் வெளியீட்டு விழாவும், இந்நூலை வெளியிட்ட பதிப்புச் செம்மல் முனைவர் ச.மெய்யப்பன் அவர்களுக்கு பாராட்டு விழாவும் தஞ்சையில் நடத்தப்பட்டது. சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் நூலினை வெளியிட்டு கவிஞர் சிற்பி.பாலசுப்பிரமணியன் சிறப்புரை நிகழ்த்தினார். முனைவர் ச.மெய்யப்பன் ஏற்புரை நிகழ்த்தினார்.

30.04.1998 புரட்சி கவிஞர பாரதிதாசன் விழா சிறப்புக் கூட்டம்.
பாரதிதாசன் நினைவினைப் போற்றும் விதத்தில் சிறப்புக் கூட்டம் திரு.வீ.சு.இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது சேக்கிழாரடிப்பொடி டி.என்.இராமச்சந்திரன், "பாரதிதாசன் ஓர் மகா கவிஞன்" என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

23.01.1999 சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரனாருக்குப் பாராட்டு விழா
தமிழ் அறிஞரும், பாரதி ஆய்வாளரும், உலகம் போற்றும் மொழிபெயர்ப்பாளருமான சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரனாருக்கு அவர் ஆற்றிய தமிழ் தொண்டினைப் பாராட்டி, பாராட்டுவிழா தஞ்சையில் நடத்தப்பட்டது.

தி.ந.இராமச்சந்திரனாரின் பல்வேறு தமிழ் பணிகள் குறித்த கருத்தரங்கம், நான்கு அமர்வுகளாக நடத்தப்பட்டன. இதில் அறிஞர் பெருமக்கள், கருத்துரை நிகழ்த்தினர். விழா நிறைவாக திரு.த.ஜெயகாந்தன் சிறப்புரை நிகழ்த்தினார்.

03.04.1999 புதுமைப்பித்தன் - ஜெயகாந்தன் கருத்தரங்கம்
தலைசிறந்த நவீன தமிழ் இலக்கியச் சிற்பிகளான புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரின் படைப்பிலக்கிய இரண்டு நாள் கருத்தரங்கம் தஞ்சையில் நடத்தப்பட்டது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர்.மகாதேவன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர்கள் அ.தட்சிணாமூர்த்தி, எஸ்.ஏ.சங்கர நாராயணன், சண்முக.செல்வகணபதி, எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ், தி.ச.ராஜு, ச.கந்தசாமி, பொன்னீலன் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர். நிறைவாக திரு.ஜெயகாந்தன் சிறப்புரை நிகழ்த்தினார்.

31.01.2000 மகாத்மா காந்தியடிகள் நினைவு நாள் கருத்தரங்கம்
காந்தியடிகளின் நினைவினை போற்றும் விதமாக மகாத்மா காந்தியடிகள் நினைவு நாள் கருத்தரங்கம் தஞ்சையில் நடத்தப்பட்டது. தியாகி டி.வெங்கடாசலம் தலைமையில் "காந்தி இன்று தேவை" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர்கள் தா.செல்லப்பா முனைவர் வீ.ரா.அழகிரிசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

02.10.2000 பாரதி பயிலரங்கம்
குழந்தைகளிடம் மகாகவி பாரதியின் பல்வேறு பரிணாமங்களை கொண்டு செல்லும் நோக்கோடு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் திருவையாறு பாரதி இயக்கத்தோடு இணைந்து தஞ்சையில் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பயிலரங்கில் கலந்து கொண்டனர். இப்பயிலரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாரதியார் கவிதை நூல் பரிசாக வழங்கப்பட்டது.

16.01.2001 மகாகவி பாரதியார் பிறந்ததின விழா
பாரதியார் பிறந்ததின விழா தஞ்சையில் சேக்கிழாரடிப்பொடி டி.என்.இராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது. விழாவில் பேராசிரியர் முவைர் கு.வெ.பாரசுப்பிரமணியம், "பாரதியும் தமிழிலக்கிய மரபுகளும்" என்ற தலைப்பிலும், வழக்குரைஞர் தஞ்சை அ.இராமமூர்த்தி "மகாகவியின் உரைநடை இலக்கியம்" என்னும் தலைப்பிலும் கருத்துரை வழங்கினர்.

16.01.2001 "வழி வழி பாரதி" நூல் வெளியீட்டு விழா
சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரனின், "வழி வழி பாரதி" நூல் வெளியீட்டு விழா தஞ்சையில் நடத்தப்பட்டது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் கதிர்.மகாதேவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளர் த.ஜெயகாந்தன் நூலினை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

16.01.2002 சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரனார் முதுமுனைவர் பட்டம் பெற்றமைக்குப் பாராட்டு விழா
இலங்கை யாழ்ப் பல்கலைக்கழகம் சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரனுக்கு முதுமுனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. அதனை சிற்பிக்கும் விதமாக அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ஔவை நடராஜன் அவர்கள் தலைமையில் தஞ்சையில் நடைபெற்ற விழாவில் டாக்டர் பிரேமா நந்தக்குமார், வழக்குரைஞர் எம்.எஸ்.வெங்கடாசலம், பேராசிரியர் கே.ஜி.சேஷாத்திரி, எழுத்தாளர் தி.ச.ராஜு உள்ளிட்ட அறிஞர்கள் பாராட்டுரை வழங்கினார்கள்.

11.09.2002 மகாகவி பாரதி நினைவு தின சொற்பொழிவு
பாரதியின் நினைவினைப் போற்றும் விதத்தில் பாரதி நினைவு நாள் சொற்பொழிவு தஞ்சையில் பாரதி சங்கத் தலைவர் திரு.வீ.சு.இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பாரதி காவலர் கே.இராமமூர்த்தி சிறப்புரை நிகழ்த்தினார்.

27.09.2003 இரா.சுப்பராயலு மணிவிழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கதிர்.மகாதேவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் பாலுசாமி நூல்கள் வெளியிட டாக்டர் பிரேமா நந்தக்குமார் நூல்களை பெற்றுக் கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

23.12.2003 பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களுக்கு பாராட்டு விழா
பாரதியின் நூல்கள் பல வெளிவர ஆதரவு வழங்கி வரும் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களுக்கு பாராட்டு விழா தஞ்சையில் நடத்தப்பட்டது. விழாவிற்கு திரு.சீனி.விசுவநாதன் அவரகள் தலைமை வகித்தார். சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர் திரு.ஏ.நடராசன், இந்து நாளிதழ் உதவியாசிரியர் திரு.ஆர்.நடராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திரு.நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.

11.09.2004 மகாகவி பாரதி நினைவு தின சொற்பொழிவு
பாரதியின் நினைவினைப் போற்றும் விதத்தில் பாரதி நினைவு தின சொற்பொழிவு தஞ்சையில் நடத்தப்பட்டது. பாரதி சங்கத் தலைவர் திரு.வீ.சு.இராமலிங்கம் தலைமையில் முனைவர் இரா.கலியபெருமாள் சிறப்புரை நிகழ்த்தினார்.

03.07.2005 எழுத்தாளர் த.ஜெயகாந்தன் அவர்கள் ஞானபீட விருது பெற்றமைக்கு பாராட்டு விழா
எழுத்தாளர் த.ஜெயகாந்தன் அவர்கள் ஞானபீட விருது பெற்றமைக்காக பாராட்டு விழா தஞ்சையில் நடத்தப்பட்டது. தஞ்சை அ.இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஜெயகாந்தனின் இலக்கியப்பணிகள் பாராட்டப்பட்டன. கவிஞர் சிற்பி.பாலசுப்பிரமணியன் சிறப்புரை நிகழ்த்தினார். ஜெயகாந்தனின் சிறப்புகள் குறித்து இதழ்களில் வெளிவந்த செய்திகள் நூலாகத் தொகுத்து நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

11.02.2006 தமிழ்க்கடல் தி.வே.கோபாலையருக்கு பாராட்டு விழா
தமிழ் மூதறிஞர் தி.வே.கோபாலையருக்கு, அவரது தமிழ்த் தொண்டினைச் சிறப்பிக்கும் விதமாக பாராட்டு விழா தஞ்சையில் நடத்தப்பட்டது. தமிழறிஞர்கள் தி.ந.இராமச்சந்திரன், ய.மணிகண்டன், முனைவர் பிரேமா நந்தக்குமார், பி.விருத்தாசலம், காந்தளகம் சச்சிதானந்தம், வே.கங்காதரன் உள்ளிட்டவர்கள் சிறப்புரை நிகழ்த்தினர். திரு.தி.வே.கோபாலையர் ஏற்புரை நிகழ்த்தினார்.

02.01.2006 மகாத்மா காந்தி பிறந்த தின விழா, சத்தியாகிரக நூற்றாண்டு விழா, வேதாரணியம் உப்பு சத்தியாகிரகம் நூல் வெளியீட்டு விழா.
மகாத்மா காந்தி பிறந்த தின விழாவும், சத்தியாகிரக நூற்றாண்டு விழாவும் தஞ்சையில் பாரதி சங்கத் தலைவர் வீ.சு.இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் மா.பா.குருசாமி விழா சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பாரதி இலக்கியப்பயிலக இயக்குனர் திரு.வெ.கோபாலன் எழுதிய "வேதாரணியம் உப்பு சத்தியாகிரகம்" என்ற நூலினை தருமை ஆதின கட்டளை விசாரணை முனைவர் குமாரசாமி தம்பிரான் வெளியிட்டார்.


திருவையாறு பாரதி இயக்க வெள்ளி விழா ஆண்டடில் பாரதி இயக்கமும், பாரதி சங்கமும் இணைந்து மாதம் ஒரு சொற்பொழிவினை நடத்தின

15.12.2002 திருவையாற்றில் திரு.வீ.சு.இராமலிங்கம் தலைமையில் சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன், 'பாரதியும் சாக்ததமும்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

12.01.2003 தஞ்சையில் முனைவர் அ.தட்சிணாமூர்த்தி தலைமையில் டாக்டர் பிரேமா நந்தக்குமார் 'பாரதியாரின் கவித்துவம்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

15.02.2003 திருவையாற்றில் முனைவர் சண்முக.செல்வகணபதி தலைமையில் புதுகை பி.கிருஷ்ணமூர்த்தி, 'பாரதியின் மறுமலர்ச்சி கருத்துக்கள்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

08.03.2003 தஞ்சையில் திரு.பாரத். சவீந்திரன் தலைமையில் முனைவர் மா.பா.குருசாமி, 'பாரதியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

14.04.2003 திருவையாற்றில் முனைவர் இரா.கௌசல்யா தலைமையில் இசை அறிஞர் பி.எம்.சுந்தரம், 'பாரதியும் இசையும்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

17.05.2003 தஞ்சையில் தஞ்சை அ.இராமமூர்த்தி தலைமையில் எழுத்தாளர் பொன்னீலன், 'பாரதியும் சாதியும்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

26.06.2003 திருவையாற்றில் திரு.இரா.சிவக்குமார் தலைமையில் திரு.இரா.சுப்பராயலு, 'பாரதியும் மொழிபெயர்ப்புகளும்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

19.07.2003 தஞ்சையில் பேராசிரியர் ந.மெய்ப்பொருள் தலைமையில் முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியம், 'பாரதியின் ஆன்மீகத்தளம்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

31.08.2003 திருவையாற்றில் முனைவர் குமாரசாமி தம்பிரான் தலைமையில் பேராசிரியர் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன், 'பாரதி முன்னைப் பழமையும் பின்னைப் புதுமையும்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
11.09.2003 தஞ்சையில் முனைவர் எஸ்.தியாகராஜ சர்மா தலைமையில் முதுபெரும் எழுத்தாளர் சுவாமிநாத ஆத்ரேயன், 'பாரதியாரின் கண்ணன்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

08.11.2003 தஞ்சையில் பேராசிரியர் பி.விருத்தாசலம் தலைமையில் முனைவர் இரா.கலியபெருமாள், 'தமிழ் இலக்கிய மரபில் பாரதியார்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

23.12.2003 தஞ்சையில் டாக்டர் நல்லி குப்பிசாமி செட்டியார் தலைமையில் காரதியியல் அறிஞர் சீனி. விஸ்வநாதன் 'பாரதி ஆய்வில் சிக்கல்கள்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

30.03.1986 தமிழ் மூதறிஞர் வாழ்வும் - வாக்கும் தொடர் சொற்பொழிவுகள் தொடக்கம்.
தமிழுக்குத் தொண்டு செய்து மறைந்த பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளை நம்மவருக்கு தெரிவிப்பது என்னும் முடிவின்படி தமிழ் மூதறிஞர் வாழ்வும் - வாக்கும் என்னும் தொடர்சொற்பொழிவினை ஒவ்வொரு மாதமும் கடை ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிறு அன்று மாலை 6.15 மணிக்கு தஞ்சாவூர் நாணயக்காரச் செட்டித் தெருவில் உள்ள சுப்பையா நாயுடு தொடக்கப்பள்ளியில் நடத்தப்பட்டு வருகின்றது. 30.03.1986 அன்று இதன் முதல் சொற்பொழிவு சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன் அவர்களால் திராவிட மாபாடிய கர்த்தர் மாதவச் சிவஞான யோகிகள் என்னும் தலைப்பில் நிகழ்த்தப்பட்டது. அது முதல் கடந்த அக்டோபர் 21, 2012 அன்று வரை மாதம் தோறும் இடைவிடாமல் 320 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.


Website Designed by Bharathi Sangam, Thanjavur