1970-களில் தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்த சங்கர் டைலர் கடையில் தஞ்சை அ.இராமமூர்த்தி, துரைராஜ், நான் இன்னும் சில அன்பர்கள் கூடி பேசுகின்ற சமயத்தில் பாரதியை கொண்டாடவும், பாரதியை பரப்பவும் முடிவெடுத்து பாரதி சங்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினோம். அது முறைப்படி பதிவுசெய்யப்படாத சங்கம்.

பாரதி சங்கம் என்பது பாரதி பற்றாளர்கள் அனைவரும் பங்குகொள்ள வசதி உடைய அமைப்பு. பாரதி சங்கம் அதன் செயல்பாடுகளில் இயங்கி வருகிறது.

பாரதி சங்கத்துடைய நோக்கம், பாரதியினுடைய வாழ்க்கையை, அவருடைய சிந்தனைகளை, அவருடைய மேதையை,அவருடைய முழு ஆளுமையை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது ஆகும். தலைமுறைதோரும் பாரதியை பயிலவேண்டும் என்பது பாரதி சங்கத்தின் நோக்கம்.

பாரதியைப் படிப்பது, சுவைப்பது, ஆராய்வது, விமர்சனம் செய்வது என்பதோடு நிற்பதல்ல பாரதி சங்கத்தின் பணி. தமிழ் சமுதாயத்தை பாரதி விரும்பிய வண்ணம் சீர்படுத்துவதுதான் பாரதி சங்கத்தின் வேலை.

சுருக்கமாகச் சொன்னால், மக்கள் அனைவரும் பாரதியை பின்பற்றி ஒழுகவும், வாழவும் செய்ய பாரதி சங்கம் முயல்கிறது.

வீ.சு.இராமலிங்கம்,
தலைவர்,
பாரதி சங்கம், தஞ்சாவூர்

Website Designed by Bharathi Sangam, Thanjavur